Learn options in tamil – part 8: ஆப்ஷன்ஸ் அறிவோம் – 8

புட் ஆப்ஷன்ஸ்

கால் ஆப்ஷன்ஸ் பற்றியே விவரித்துக்கொண்டிருப்பதால் புட் ஆப்ஷன் என்பது வேறு ஏதோ என்று நினைக்கத் தேவையில்லை.

ஒரு பங்கின் விலை ஏறப்போகிறது என்று தெரிந்தால் கால் ஆப்ஷன் வாங்குகிறோம். 

உதாரணத்திற்கு ஹெச் டி எப் சி வங்கியின் பங்குகளை எடுத்துக்கொள்வோம்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு அதன் ரிசல்ட் வெளியானபிறகு இந்தியாவே அதன் விலை 1200 தாண்டும் என்று எதிர்பார்த்தபோது அது அதள பாதாளத்திற்குச் சென்றது. 

நீங்கள் 1100 கால் ஆப்ஷன் வாங்கி இருந்தால் உங்களுக்கு நட்டம் ஏற்பட்டிருக்கும்.

21 ஜூலை அன்றைய விலை 1157. அங்கிருந்து படிப்படியாக கீழிறங்கி 993 வரை வந்தது. 

நீங்கள் புத்திசாலித்தனமாகக் கணக்கு போட்டு இன் தி மணியில் புட் ஆப்ஷன் வாங்கி இருந்தால் அட்டகாசமாக லாபம் பார்த்திருக்கலாம்.

புட் ஆப்ஷனில் எது இன் தி மணி? ஏற்கனவே ஸ்டிரைக் ரேட்டுக்குச் சொன்ன படிக்கட்டு உதாரணத்தை நினைவில் கொள்ளுங்கள்

கால் ஆப்ஷன்.

மாடிப் படிக்கட்டில் ஒரு பங்கு ஏறும் என்று நினைத்தால் நீங்கள் கீழிருந்து மேலே செல்கிறீர்கள்.  

இன் தி மணி கால்.

மொத்தம் 10 படிக்கட்டுகள். நீங்கள் இருப்பது 5ம் படியில். பங்கு செல்லப்போவது 7 ம் படிக்கு என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் வாங்கவேண்டிய இன் தி மணி 4 ம் படியில் இருக்கும் ஸ்டிரைக் ரேட். 

7 ம் படியே போதும் என்று நினைத்தால் அது அவுட் ஆஃப் தி மணி.

5 ம் படிதான் அட் தி மணி.

சரி, புட் பற்றிப் பார்ப்போம்.

இன் தி மணி புட் ஆப்ஷன்.

மொத்தம் 10 படிக்கட்டுகள். நீங்கள் இருப்பது 5ம் படியில். பங்கு செல்லப்போவது 3 ம் படிக்கு என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் வாங்கவேண்டிய இன் தி மணி 6 ம் படியில் இருக்கும் ஸ்டிரைக் ரேட். 

3 ம் படியே போதும் என்று நினைத்தால் அது அவுட் ஆஃப் தி மணி.

5 ம் படிதான் அட் தி மணி.

இங்கேதான் பலர் குழம்புவார்கள். புட் என்றால் பங்கு விலை குறையப்போகிறது எனில் 1157 லிருந்து ஹெச் டி எப் சி பங்கு 950 க்குச் செல்லுமென்றால் நான் 950 அல்லது 900 வாங்குவதுதானே சரி என்று நினைப்பீர்கள்.

இல்லை. அது ஓ டி எம் எனப்படும் அவுட் ஆஃப் தி மணி புட் ஆப்ஷன்.

இங்கே பங்கு கடந்துவந்த பாதைதான் இன் தி மணி.

ஆக, 1150 மேலே இருப்பவைதான் இன் தி மணி. 1200 லிருந்துதானே பங்கு 1150 ற்கு வந்திருக்கவேண்டும்? கடந்து வந்த பாதைதானே இன் தி மணி?

சார், 1200 க்குத்தான் அந்தப் பங்கு செல்லவே இல்லையே? 

அதனால் என்ன? அதைப் பற்றிக் கவலை இல்லை. ஒரு எண்ணிக்கை கீழே செல்லும்போது அது எங்கிருந்து செல்கிறது என்ற கணக்கு மட்டும் போதும். 

ஹெச் டி எப் சி ஆப்ஷன் செயினைப் பாருங்கள். 

ஹெச் டி எப் சியின் தற்போதைய விலை 1043 அதனால் 1040 எனும் ஸ்டிரைக் ரேட் அட் தி மணியாக இருக்கிறது.

1040 க்கு மேலே 710 வரை இன் தி மணி கால் ஸ்டிரைக் ரேட்கள். அதாவது 1040 கடந்து வந்த பாதை. 1 முதல் 5 வரையிலான படிக்கட்டுகள். 1050 முதல் 1340 வரை கால் ஆப்ஷனில் இது அவுட் ஆஃப் தி மணி.

1040 க்குக் கீழே 1340 வரை இன் தி மணி புட் ஸ்டிரைக் ரேட்கள். அதாவது 1040 கடந்து வந்த பாதை. 10 முதல் 5 வரையிலான படிக்கட்டுகள். 1050 முதல் 710 வரை புட் ஆப்ஷனில் அவுட் ஆஃப் தி மணி. 

கால் ஆப்ஷனுக்கு மேல் பக்கம் கலர் கோடும், புட் ஆப்ஷனுக்குக் கீழ்ப்பக்கம் கலர் கோடும் கொடுத்திருப்பார்கள். இதை வைத்து எது இன் தி மணி என்பதை சுலபமாக அடையாளம் காண முடியும்.

(தொடரும்)
Written by Shankar Ji – எழுதியவர்: ஷங்கர்ஜி