ஸ்ட்ரைக் ப்ரைஸ் பற்றி ஒரு மாதிரி குன்ஸாகப் புரிந்துகொண்டோம்.
அடுத்து ஸ்பாட் ப்ரைஸ் என்றால் என்ன?
ஒன்றுமில்லை. அப்பொழுதைய அந்த ஸ்டாக்கின் கேஷ் மார்கெட் விலை என்ன? அதுதான் ஸ்பாட்.
எதற்கு ஸ்பாட் ப்ரைஸ் உதவுகிறது?
ஆப்ஷன் காண்டிராக்ட்டில் மூன்றுவிதமான ஸ்ட்ரைக் ப்ரைஸ்கள் பார்த்தோம்.
In the Money
At the Money
Out of the Money
இதில் நாம் வாங்க நினைக்கும் பங்கு எந்த கட்டத்தில் தற்பொழுது இருக்கிறது என்பதை அறிய இந்த ஸ்பாட் ப்ரைஸ் உதவுகிறது.
உதாரணத்திற்கு
ரிலையன்ஸ் 2050 ல் தற்பொழுது வர்த்தகமாகிறது என்று வைத்துக்கொண்டால், 2090 நிச்சயம் செல்லும் என்று நீங்கள் கணித்து உடனடியாக ஏறக்கூடிய ஒரு சந்தர்ப்பமாக அதை நினைக்கிறீர்கள்.
எனில் In the money ஸ்ட்ரைக் ப்ரைஸ் என்பது 2040. இதை வாங்கினால் உடனடியாக பங்கு ஏறும்போது லாபம் கிடைக்கும். ஏன்?
ஸ்ட்ரைக் ப்ரைஸில் படிக்கட்டு உதாரணம் மீண்டும் படியுங்கள்.
இன் தி மணி காண்டிராக்ட்டின் மகிமை இதுதான்.
2050 என்பதுதான் ATM at the money இதில் வாங்கினால் அது அடுத்த கட்டமான 2060 சென்றபிறகுதான் லாபம் காட்டும். இதில் பலனில்லை.
2090 என்பதுதான் OTM out of the money. உங்கள் டார்கெட் 2090 ஆக இருந்தால் இதை வாங்குவதால் பெரிய பலனில்லை.
ஏன்?
அந்தப் பங்கு 2090 கடந்து 2100 க்குள் நுழையும்போதுதான் அங்கே கும்பல் கூடும். வர்த்தகம் நடக்கும் உங்கள் பிரீமியம் ஏறும். அதுவரை சிறிய லாபம் கிடைக்கலாம்.
இப்பொழுது எதாவது ஒன்றின் ஆப்ஷன் செயின் திறந்து பாருங்கள். ஒரு பங்கு கடந்து வந்த பாதையின் அதாவது இன் தி மணி எல்லா பிரீமியமும் அதிகமாக இருக்கும். ஓ டி எம் குறைவாக இருக்கும்.
சூப்பர் சார். இனிமே இன் தி மணிதான் வாங்கி லாபம் பார்க்கப்போகிறேன்.
வாழ்த்துகள். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் உண்டு.
தற்பொழுது வர்த்தகமாகும் HDFC Bank உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
சென்ற சனிக்கிழமை ரிசல்ட். மொத்த சந்தையும் விலை ஏறும் என்று பெட் கட்டினார்கள். ஆப்ஷன் காண்டிராக்ட்டில் 1150 என்ற ஓ டி எம் கால்களும், எதுக்கு வம்பு என்று 1100 இன் தி மணி கால்களும் வாங்கப்பட்டது.
என்ன நடந்தது?
மந்தைக்கு எதிர்ப்பக்கம் வேலை செய்யும் சந்தையானது விலையை கீழே இறக்கியது.
இதனால் என்னாயிற்று?
புத்திசாலித்தனமாக இன் தி மணியில் வாங்கப்பட்ட காண்டிராக்ட்கள் எல்லாம் அவுட் ஆஃப் த மணிக்கு தள்ளப்பட்டது.
எனில் அவுட் ஆஃப் த மணியில் வாங்கப்பட்டவை? அது டீப் ஓ டிம் எம் என்ற நிலைக்குச் சென்றுவிட்டது.
இதனால் என்னாகும்?
இந்த ஜூலை மாத காண்டிராக்ட்கள் முடிய ஒரு வாரம் அதிலும் இரண்டு நாள் சனி,.ஞாயிறு கழிக்கப்படும் நிலையில் ஜூலை மாத ஆப்ஷன் காண்டிராக்ட்கள் பிரீமியம் கரைந்து முதலீட்டாளர்கள் வயிற்றில் புளியைக் கரைத்து தெறித்து ஓட வைக்கும். ஆகஸ்ட் காண்டிராக்ட் அதுவும் ஓரளவு இன் தி மணியில் வாங்கியவர்கள் பல்லைக் கடித்துக்கொண்டு விலை ஏறக் காத்திருக்கலாம்.
15 தேதிக்குப் பிறகு அந்த மாதத்தில் புதிய ஆப்ஷன்கள் வாங்குவதில் மிகுந்த கவனம் தேவை. கடைசி வாரத்தில் அந்த மாதக் காண்டிராக்ட்கள் வாங்குவது மிகுந்த நட்டத்தைத் தரலாம். பெரிய டைம்ப்ரேம்கள் பார்த்து முடிவெடுக்கக்கூடாது. மாதம் முடிய சில நாட்கள் இருக்கும் நிலையில் அன்றே நடக்கக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தாலொழிய வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது
ஒரு ஆப்ஷன் காண்டிராக்ட்டை வாங்கும் முன்னர் கவனிக்கவேண்டியவை என்ன?
(தொடரும்)
Written by Shankar Ji – எழுதியவர்: ஷங்கர்ஜி