Learn options in tamil – part 3: ஆப்ஷன்ஸ் அறிவோம் – 3

விலை ஏறும் என்று கணித்து கால் ஆப்ஷனோ, விலை இறங்கும் என்று கணித்து புட் ஆப்ஷனோ வாங்கச் சென்றால் ஏகப்பட்ட ஸ்ட்ரைக் ரேட்கள்.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரீமியத்தில் இருக்கிறது. எதை வாங்குவது?

எதை வேண்டுமானாலும் வாங்கலாம். ஆனால் எதை வாங்கினால் லாபம். எது நட்டம் என்பதில்தான் அடங்கி இருக்கிறது ஸ்ட்ரைக் ப்ரைஸ் சூட்சுமம்.

முதலில் ஸ்ட்ரைக் பிரைஸ் என்றால் என்ன? மிக எளிமையாகப் புரிந்துகொள்ள இந்த உதாரணம் உதவும்.

நிப்டி ஸ்ட்ரைக் ப்ரைஸ்கள் 7500 துவங்கி 14000 வரை செல்கிறது. நிப்டி இப்பொழுது 11162 ல் இருக்கிறது.

இந்த ஸ்ட்ரைக் ரேட் வரிசையை எப்படிப் புரிந்துகொள்வது?

In the Money – ITM
At the Money – ATM
Out of the Money – OTM

என்றால் என்ன?

உங்கள் வீட்டு மாடிப்படிக்குச் செல்லுங்கள்.

மேலே செல்ல முதல் படியில் 7000 என்று எழுதுங்கள்.

கடைசியில் மேலே முடியும் படியில் 14000 என்று எழுதுங்கள்.

இப்பொழுது நீங்கள் 11000 என்று எழுதப்பட்ட படியில் நின்றுகொள்ளுங்கள்.

ஆச்சா?

நீங்கள்தான் நிப்டி.

கீழே இருந்து நீங்கள் ஏறிவந்த படிகளான 7000 முதல் 10500 வரையிலான படிகள்தான்

In the Money – ITM

நிப்டியான நீங்கள் கடந்து வந்த பாதை.

புரிகிறதா?

நிப்டி 7000 துவங்கித்தானே ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து இப்பொழுது 11100 வந்திருக்கிறது?

11000 என்று எழுதப்பட்ட படியில் நீங்கள் நிற்கிறீர்களே அதுதான் At the Money – ATM

அடுத்து நீங்கள் நிப்டி மேலே செல்லும் என்று கணிக்கிறீர்கள்.

எவ்வளவு செல்லும்?

ஆகஸ்டில் 12000 போகும் சார். வாஸ்து பிரகாரம் ஆடி போய் ஆவணி வந்தா டாப்ல போகும்.

எனில் உங்களுக்கு மேலே நிப்டியான நீங்கள் கடக்கவேண்டிய படிகள்தான் Out of the Money – OTM.

இப்பொழுது Option Chain திறந்து பாருங்கள். கடந்து வந்த ஸ்ட்ரைக் ரேட்கள் எல்லாமே ஒரு கலர் கோடில் இருக்கும்.

சுலபமாக In the Money ITM ஸ்ட்ரைக் ரேட்களை அடையாளப்படுத்த இந்த ஏற்பாடு.

ஸ்ட்ரைக் பிரைஸ் புரிந்தது சார்.

இந்த ஸ்பாட் ப்ரைஸ்.

பிரீமியம்.

எதை வாங்கினால் லாபம் பார்க்கலாம்.

எது கையைச் சுடும்.

வீக்லி காண்டிராக்ட்டா?

மந்த்லி காண்டிராக்ட்டா?

எதை வாங்கலாம்?

நேக்கட் ஆப்ஷன் என்றால் என்ன?

புட் பக்கம் சென்று பார்த்தால் In the Money ITM எதிர்ப்பகம் இருக்கிறதே?

அது ஏன்?

ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

(தொடரும்)
Written by Shankar Ji – எழுதியவர்: ஷங்கர்ஜி