கால் ஆப்ஷன்ஸ் பற்றிப் படித்துக்கொண்டிருக்கிறோம்.
https://www.nseindia.com/option-chain
இந்த வெப்சைட்டில் சென்று பார்த்தால் பலவகையான ஸ்டிரைக் ரேட்கள் இருக்கும்.
உதாரணத்திற்கு நிப்டியை எடுத்துக்கொண்டால் 7500 துவங்கி 12400 வரையில் இருக்கும்.
நிப்டி எங்கே செல்லும் என்று தெரியாதவர்கள் ஒரு நம்பர் சுரண்டல் லாட்டரியைப் போல 12400 ஸ்டிரைக் ரேட்டில் ப்ரீமியம் பார்த்து விலை குறைவாக (நம்புங்கள் வெறும் 60 பைசா) வாங்குவார்கள். ஏதோ ஒரு காரணம் திடீரென்று அடுத்த மாதம் நிப்டி 13000 போனால் அவருக்கு அடிக்கும் ஜாக்பாட். அதாவது நிப்டியின் லாட் சைஸ் 75.
0.60 பைசாவுக்கு ஒரு ஷேர் என்றால் லாட் 75*0.60 = 45 ரூபாய். அட பேச்சுக்கு ஆயிரம் லாட் 45000 கொடுத்து வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த ஜாக்பாட் அதிசியம் நடந்தால் தோராயமாக ஒரு ஷேர் .60 Premium 200 ரூபாய்க்குச் செல்லும். ஒரு லாட் 15000 ரூபாயாக மாறும். வாங்கி இருப்பதோ 1000 லாட்கள். எவ்வளவு கிடைக்கும் என்பதை ஒரு சொம்பு தண்ணீர் குடித்துவிட்டு கணக்குப் போட்டுப் பாருங்கள்.
ஒரே நாளில் ஒபாமா ஆவது இப்படித்தான்.
சூப்பர் சார். அப்புறம் நான் எதுக்கு 4500 லாபத்துக்கு ரிலையன்ஸ் கால் ஆப்ஷனை வாங்கி கடவுளுக்கு நன்றி சொல்லோணும் என்று தோன்றுகிறதா?
கண்டிப்பாகத் தோன்றும். ஏனென்றால் நாமெல்லாம் அவ்வளவு அப்பாவிகள்.
இப்படி சம்பந்தமே இல்லாத நடப்பு பங்கின் விலையை விட அதிக ஸ்டிரைக் ரேட்டில் விற்கும் ஆப்ஷன்களுக்குப் பெயர்தான் ஓ டி எம் OTM அல்லது அவுட் ஆஃப் தி மணி ஆப்ஷன்ஸ் (Out of the Money Options). கண்டிப்பா ஏழாம் நம்பர் குதிரை ஜெயிக்கும் சார். அது காதப் பார்த்தாலே தெரியல? என்று மஞ்சக்கலர் புத்தகத்துடன் கிண்டி ரேஸ்கோர்ஸில் பெட் கட்டும் மக்கள் போல இந்த மாதிரி டீப் ஓ டி எம் கால்கள் வாங்கி காசை கரியாக்குவது சாதாரணமாக நடக்கக்கூடிய ஒன்று.
இப்படிப்பட்ட ஸ்டிரைக் ரேட்களால் யாருக்கு லாபம்?
சர்வநிச்சயமாக அதை விற்பவருக்குத்தான்.
அப்ப கால் விற்பது அதை வாங்குவதை விட நல்ல லாபமா சார்?
இல்லை. அதற்கும் ஒரு பெரிய ஆப்பினை வைத்திருக்கிறார்கள். அதைப் பின்னர் பார்க்கலாம்.
எல்லாம் ஓக்கே சார். அந்த ஸ்டிரைக் ரேட் என்றால் என்ன என்று மட்டும் சொல்லவே இல்லையே?
அடுத்து அதுதான்.
(தொடரும்..)
Written by Shankar Ji – எழுதியவர்: ஷங்கர்ஜி