ஆப்ஷன்ஸ் என்றால் என்ன? Options Trading
ஆப்ஷன்ஸ் இருவகைப்படும்.
கால் CALL
புட் PUT
இரண்டிலும் இரண்டு வகை உண்டு.
கால் – வாங்குவது. Long Call
கால் – விற்பது. Short Call
புட் – வாங்குவது. Long Put
புட் – விற்பது. Short Put
ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
கால் வாங்குவது என்றால் என்ன?
முதலில் கால் ஆப்ஷன் என்றால் என்ன?
ஒரு பங்கின் விலை எதிர்காலத்தில் ஏறும் என்று கணிக்கிறீர்கள் என்றால் அந்தப் பங்கின் கால் ஆப்ஷனை வாங்கவேண்டும்.
ஒரு பங்கு எதிர்காலத்தில் விலை குறையப்போகிறது என்று கணிக்கிறீர்கள் என்றால் புட் ஆப்ஷன் வாங்கவேண்டும்.
மீண்டும் ஒருமுறை படியுங்கள்.
இங்கே கால் அல்லது புட் வாங்க மட்டுமே செய்கிறோம். விற்பதில்லை. ஏன்? அதைப் பிறகு பார்க்கலாம்.
ஓகே. ரிலையன்ஸ் அம்பானி வொர்க் ஃப்ரம் ஹோம் என்று நாமெல்லாம் யுட்யூப் பார்த்து மைதா மாவு கேக்கும், பரோட்டாவும் தட்டிக்கொண்டு கோ கொரோனா கோ என்று சாப்பிட்ட தட்டினைத் தட்டிக்கொண்டிருந்த நேரத்தில் 1.5 லட்சம் கோடிக்கு மேல் ஜியோவிற்கான முதலீட்டினை சம்பாதித்திருக்கிறார்.
ஆக, ரிலையன்ஸ் மேலே செல்லும். ரூ.2000 தாண்டும் என்று கணிக்கிறீர்கள்.
ரிலையன்ஸில் விலை எதிர்காலத்தில் ஏறும் என்று கணிப்பதால்
கால் ஆப்ஷனை வாங்கவேண்டும்.
அங்கே சென்று பார்த்தால் ஓர்ர்ரே குழப்பமாக இருக்கிறது. ஊர்ப்பட்ட ஸ்ரைக் ரேட் என்று போட்டு அதற்கு இன்னொரு விலையைப் போட்டு பிரீமியம் என்கிறார்கள். எதை வாங்குவது? எப்படி வாங்குவது?
உங்கள் ப்ரோக்கர் சாப்ட்வேரில் அல்லது என் எஸ் ஸி வெப்சைட்டில் ஆப்ஷன் செயின் என்று ஒரு பகுதி இருக்கும். அதைத் திறந்தால் பல ஸ்ட்ரைக் ரேட்டுகளில் ரிலையன்ஸ் பங்கின் ஆப்ஷன் கால்கள் இருக்கும். ஒவ்வொரு ஸ்டிரைக் ரேட்டிற்கும் ஒவ்வொரு ப்ரீமியம் இருக்கும்.
இதை எப்படிப் புரிந்துகொண்டு எதை வாங்கினால் லாபம் கிடைக்கும்?
அதற்கு முதலில் கால் ஆப்ஷன் என்றால் என்ன என்று புரிந்துகொள்வோம்.
505 ரிலையன்ஸ் ஷேர்களை நீங்கள் வாங்க சுமார் பத்து லட்ச ரூபாய் தேவைப்படும். அதென்ன 505? அதுதான் லாட் சைஸ் அதற்குக் கீழே சில்லறை விற்பனை என்பது இல்லை. ஒரு லாட் 505.
பத்து லட்ச ரூபாய் இல்லாமல் கையில் 50000 ரூபாய் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒரு பிரீமியத்தைக் கட்டி ஒரு கால் ஆப்ஷனை நீங்கள் வாங்க முடியும்?
எப்படி சார், 10 லட்சம் பெருமானமுள்ள ஒன்றை 50 ஆயிரத்திற்குத் தருவார்கள்?
உங்களிடம் ஒரு கார் இருக்கிறது. அதன் விலை 10 லட்சம். நீங்கள் எவ்வளவு ரூபாய்க்கு இன்சூரன்ஸ் எடுக்கிறீர்கள்? அதிகபட்சம் 30 ஆயிரம் ரூபாய்தான் இல்லையா?
30 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு அந்த இன்சூரன்ஸ் கம்பெனியிடம் நீங்கள் போடும் காண்டிராக்ட் என்ன?
என் காருக்கு இன்சூரன்ஸ் காலம் வரை ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதற்கான தொகையை நீங்கள்தான் கொடுக்கவேண்டும்.
இன்சூரன்ஸ் கம்பெனி என்ன சொல்லும்?
கண்டிப்பாக தருகிறோம் சார். ஆனால் ஒன்றுமே ஆகாவிட்டால் அந்த இன்சூரன் பிரீமியமான 30000 எங்களுக்கு. டீல் ஓக்கேயா?
ஓகே.
இப்பொழுது ஆப்ஷனுக்கு வருவோம்.
ரிலையன்ஸ் 505 ஷேர்கள் 10 லட்சம். விலை ஏறுமென்று ஒரு ஆப்ஷன் காண்டிராக்ட் வாங்குகிறீர்கள். விலை 50 ஆயிரம் அதாவது 505 ஷேர்களுக்கு ஒன்றிற்கான ப்ரீமியம் சுமார் 90 ரூபாய். நீங்கள் கணித்தபடி ரிலையன்ஸ் ஷேரின் விலை ஏறுகிறது. இப்பொழுது நீங்கள் 90 கொடுத்து வாங்கிய ப்ரீமியம் நீங்கள் கணித்தபடி விலை ஏறியதால் 98 ரூபாயாக அதுவும் விலை ஏறிவிட்டது.
அப்படி என்றால் 505 * 8 = 4016 ரூபாய் லாபம். ஆண்டவருக்கு நன்றி கூறி அதை விற்கிறீர்கள். ரூ. 4016 லாபம்.
சூப்பரா இருக்கே சார். இவ்ளோ ஈஸியா ஆப்ஷன்ஸ்?
ஆம் மற்றும் இல்லை.
இதற்கு ஸ்டிரைக் ரேட் என்றால் என்ன?
எந்த ஸ்டிரைக் ரேட் வாங்குவது?
எப்படி வாங்குவது?
ஒவ்வொரு காண்டிராக்டின் கால அளவு என்ன?
எவ்வளவு காலம் விலை ஏறக் காத்திருக்கலாம்?
இன் தி மணி, அட் தி மணி, அவுட் ஆஃப் தி மணி என்றெல்லாம் சொல்கிறார்களே அது என்ன?
ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
(தொடரும்)
Written by Shankar Ji – எழுதியவர்: ஷங்கர்ஜி