ஆகஸ்ட் 14 மதியம் 1.30 மணியளவில் வழக்கம்போல நிஃப்டி இறங்கத்துவங்கியது, பொதுவாக எல்லோரும் ட்ரேட் செய்யும் நிஃப்ட்டிய நாம் ட்ரேட் செய்வதில்லை. டெலிகிராம் க்ருப்பில் அப்டேட் செய்யும்போதுதான் கவனித்தேன் நிஃப்ட்டியின் கீழிறங்கும் டார்கெட் என்னவென்று, அதையும் தாண்டி நிஃப்ட்டி வர்த்தகம் ஆகும்போது நமக்கு வேறு வழியே இல்லை அங்கிருந்து ரிவர்ஸ் ட்ரேட் செய்வதுதான் வழக்கம், அதனால் அதிகமாக வர்த்தகமான நிஃப்ட்டி கால் எதுவென்று பார்த்தபொழுது 11500 கால் என்று தெரிந்தது, அதனால் அதன் குறைந்த விலையில் வாங்கும் வாய்ப்பு கிடைத்தது. வாங்கிய பிறகு விற்பனைக்கு போட்ட ஆர்டர்தான் நீங்கள் படத்தில் பார்ப்பது. திடீரென ஏறியதில் நமக்கு வர்த்தமாகிவிட்டது, ஆனால் எந்த சார்ட்டிலும் இது பதிவாகவே இல்லை. இந்தியாவில் உள்ள அத்தனை ப்ரோக்கர் சார்ட்டிலும் பெரும்பாலும் சரிபார்த்தாகிவிட்டது , எதிலும் இந்த வர்த்தகம் பதிவாகவே இல்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது?!

என்.எஸ்.இ எப்போது எலக் ட்ரானிக் ட்ரேடிங் முறையை அறிமுகபடுத்தியதோ அதிலிருந்தே இந்த தகிடுதித்தம் நடந்துகொண்டிருக்கிறது. உசாரய்யா உசாரு…உங்க ட்ரேடெல்லாம் உசாருன்னு சொல்லிக்கொண்டு இத்துடன் எனது சிற்றுரையை முடித்துக்கொள்கிறேன்!